கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்
கிராமத்தை சுத்தமாக வைப்பது என்பது நமது தலையாய கடமையாகும். ஏனெனில் சுத்தமான கிராமம்தான் நமக்கு தூய்மையான காற்று மற்றும் குடிநீர் பெற வழிவகை செய்கிறது. எனவே கிராமத்தை தூய்மையாக பராமரித்தல் என்பது நம்மை மாசுக்கள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் பெரும் கருவியாக செயல்படும்.

சுத்தமான கிராமம்
சுகாதாரமான கிராமம்.

இயற்கை வளத்திற்காக மரக்கன்றுகளை நடுவது மற்றும் அதன் பராமரிப்பு சேவைத் திட்டம்

கிராமத்தை பசுமையாக மாற்றுவதில் தாவரங்கள் மற்றும் செடிகள் பெறும் முக்கிய பங்காற்றுகிறது மரங்கள் மண் அரிப்பில் இருந்தும் மண்சரிவில் இருந்தும் இயற்கையை காத்து நமது கிராமம் மண் வளம் மற்றும் மழை வளம் பெற்று சீரான தட்ப வெப்பநிலையுடன் சிறப்பாக இருப்பதற்கு இந்த பசுமைத் திட்டம் பெரிதும் உதவி புரிகிறது.

மரம் நடுவோம்
மழை பெறுவோம்.