கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்
கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்
கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்

கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கம், முழுக்க முழுக்க கிராம மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம் மேலும் விளையாட்டு துறையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிப்பது என பல கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்காக இக்கிராம முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகம் பல நல்ல திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. உதாரணமாக கல்வி, சுகாதாரம், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம், கிராமம் மற்றும் அதன் உள்கட்டமைப்பு போன்றவற்றிற்கு துணையாக செயல்படும் பிற கிராமமக்கள் அமைப்பிற்கு உதாரணமாகவும் முன்னோடியாகவும் இக்கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகம் விளங்குகிறது.

மேலும் இக்கிராம முன்னேற்ற கழகம் பல நீண்டகால நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கிறது. அவை யாதெனில் கல்லப்பாடி புனர்வாழ்வு நடவடிக்கைகள், பசுமை தோட்ட உருவாக்கம், அதற்கான பணிக்குழுக்கள் உருவாக்குதல், குழந்தை மேம்பாட்டுக்கான ஆதரவு மற்றும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கும் ஆதரவு என பல நீண்டகால திட்டத்திற்கு இக்கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகம் ஆதரவு அளிக்கிறது.

இக்கிராம முன்னேற்ற கழகத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவளித்த அனைவருக்கும், எங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக எங்களுடன் கை கோர்த்த கிராம மக்களுக்கும் மற்றும் பலவகைகளில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இக்கிராம முன்னேற்ற கழகம் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இக் கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகத்தின் நோக்கங்களை மனதில் கொண்டு எங்களது கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் பின்வருமாறு.

“இவ்வாறு இன்னும் பல திட்டங்களை கிராம மக்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து எங்களது கல்லப்பாடி கிராம மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறோம்.”
a1

கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகத்தின் நோக்கம்

சிறந்த கல்வி ஆற்றல் அமைப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு, சுற்றுப்புறச்சூழல் தூய்மைனர்,மக்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் மக்களின் ஒற்றுமையை போற்றும் கிராமமாக எங்களது கிராமத்தினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதே எங்களின் நோக்கமாகும்.

கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகத்தில் மேற்கொள்ளும் பணி

கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகத்தின் நோக்கங்களை மனதில் கொண்டு எங்களது கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேலே கூறப்பட்ட அனைத்து திட்டங்களையும் சேவைகளையும் செயலாற்றுவதே எங்கள் பணியாகும்.